திரையுலகினருக்கு போதைப் பொருள் சப்ளை வழக்கு.. அர்ஜூன் ராம்பாலின் சகோதரி கோமலிடம் NCB விசாரணை

0 1350
போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலின் சகோதரி கோமலிடம் (Komal) போதை பொருள் கட்டுப்பாட்டு துறையினர் (Narcotics Control Bureau) விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலின் சகோதரி கோமலிடம் (Komal) போதை பொருள் கட்டுப்பாட்டு துறையினர் (Narcotics Control Bureau) விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் அர்ஜூன் ராம்பாலின் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி போதை பொருள் கட்டுப்பாட்டு துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும் அர்ஜூன் ராம்பாலிடமும், அவருடைய காதலியான கேப்ரியலாவிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ராம்பாலின் சகோதரியான கோமலுக்கு அவர்கள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதில் மும்பையில் உள்ள அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை ஆஜராக கோரியிருந்தனர்.

ஆனால் அவர் புதன்கிழமை நேரில் ஆஜராகாததுடன் கால அவகாசம் கோரியிருந்தார். இதையேற்று அவருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை அவர் நேரில் ஆஜரானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments