தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி, அங்கிருந்து தாமிரபரணி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனிடையே, மழையால் ஆங்காங்கே ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தாமிரபரணியில் கலக்கின்றது. நதிக்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததால், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஆற்றக்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments