பட்ஜெட்டில் செஸ் எனப்படும் துணைவரிகள் விதிக்கப்படலாம் என தகவல்
கொரோனா கட்டுப்பாடு, அதற்கான தடுப்பூசி உள்ளிட்ட கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட, வரும் பட்ஜெட்டில் கூடுதல் துணை வரிகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் 1 ஆம் தேதி மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழிற்துறை பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த தகவல் பகிரப்பட்டதாக எகானமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கூடுதலாக வரிகளையோ, துணை வரிகளையோ விதிக்க கூடாது என தொழிற்துறையினர் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் கூடுதல் செலவுகள் இருப்பதால், உயர் வருமான பிரிவினர் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் சுங்கவரி மீது சிறிய அளவிலான செஸ் எனப்படும் துணைவரிகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments