ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது
சிட்னியில் நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
407 ரன்கள் இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. கடைசி நாளான இன்று புஜாரா, பந்த் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
அபாரமாக விளையாடிய பந்த் 97 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதையடுத்து புஜாரா 77 ரன்னில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த விஹாரியும், அஸ்வினும் தோல்வியை தவிர்க்க நிதானமாக ஆடினர். குறிப்பாக, விஹாரி முதல் 6 ரன்களை 100 பந்துகளில் எடுத்தார்.
இதனால் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளை சந்தித்து மிகக்குறைந்த ரன்களை எடுத்த 2வது வீரர் என்ற பெயரை பெற்றார்.
ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களை மட்டுமே இந்தியா எடுக்கவே போட்டி டிரா ஆனது.
Comments