லஞ்ச புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

0 2815
லஞ்ச புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின், புதுக்கோட்டை மாவட்ட வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின், புதுக்கோட்டை மாவட்ட வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 14 ஆம் தேதி சென்னையிலுள்ள பாண்டியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் 18 மணி நேரமாக நடந்த சோதனையில் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம், 3 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் மற்றும் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குளத்தூர் பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments