சில எல்லை பகுதிகளை இந்தியாவிடம் இருந்து மீட்க போவதாக நேபாள பிரதமர் சர்மா ஒளி மீண்டும் சர்ச்சை பேச்சு

0 4650
இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் இடையே முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், நேபாள பிரதமர் சர்ம ஒலி மீண்டும் சர்ச்சையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.

இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் இடையே முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒளி மீண்டும் சர்ச்சையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.

இந்தியாவுக்கு சொந்தமான காலாபானி, லிம்பியுத்ரா மற்றும் லிபுலேக் பகுதிளுக்கு நேபாளம் சொந்தம் கொண்டாடியதால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன. அதற்குப் பிறகு தளபதி நரவணே, வெளியுறவு செயலர் ஆகியோரின் பயணங்களுக்குப் பிறகு உறவுகள் ஓரளவு சரி செய்யப்பட்டன.

இந்த நிலையில் நேற்று ஆற்றிய உரையில், இந்த பகுதிகளை இந்தியாவிடம் இருந்து திரும்ப பெறுவேன் என சர்ம ஒலி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேபாளத்தில் சர்ம ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் உள்கட்சி பூசல் ஏற்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments