தலைநகர் டெல்லி, மகாராஷ்டிராவிலும் பரவியது பறவைக் காய்ச்சல்
தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
கேரளா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பரவியிருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் இறந்து கிடந்த 8 காக்கைகள், வாத்துகளின் உடல்களை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி கால்நடைத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில் பறவைக் காய்ச்சல் காரணமாக அவை உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதேபோல் மகாராஷ்டிர மாநிலம் பார்பானி மாவட்டத்திலும் பறவை காய்ச்சலால் 800 கோழிகள் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டில் 9 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
Comments