சீனாவில் உற்சாகத்துடன் தொடங்கிய வருடாந்திர ஹார்பின் பனித் திருவிழா!
சீனாவில் ஹார்பின் பனித் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது.
ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹார்பின் என்ற இடத்தில் கடந்த 1985ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஜனவரி மாதமும் பனித் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். முழுக்க முழுக்க பனியால் செய்யப்பட்ட மாளிகைகள், கோபுரங்கள், விளையாட்டு மைதானங்கள், சிற்பங்கள் என பல்வேறு அற்புதங்களை அங்கு காணலாம்.
இதற்காக பல்லாயிரம் டன் எடை கொண்ட பனியை வெட்டி கலைநயத்துடன் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று என்பதால் நடப்பாண்டு இந்நிகழ்வு நடக்குமா என ஏற்பட்ட ஐயம் போக்கப்பட்டு, கோலாகலமாக ஹார்பின் பனித் திருவிழா தொடங்கியுள்ளது.
Comments