பூந்தமல்லி - திருமழிசை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை பணி தொடங்கியது

0 5182
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைய உள்ளதைக் கருத்தில் கொண்டு, பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 4வது வழிப்பாதை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதிப் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments