அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள போவதாக போப் பிரான்சிஸ் அறிவிப்பு
அடுத்த வாரம் தாம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வாடிகன்சிட்டியில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், ஒவ்வொருவரும் தங்கள் உயிரை மட்டுமல்ல மற்றவர்களையும் பாதுகாக்க கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றார்.
நெறிமுறைப்படி அனைவரும் தடுப்பூசி எடுக்க வேண்டுமென்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். வாடிகன்சிட்டியில் போப் பிரான்சிஸ் உள்பட 450பேர் உள்ளனர்.
அங்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவில் போப்பும் இடம்பெற்றுள்ளார்.
Comments