விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீது இன்று விசாரணை
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை இன்று விசாரணை நடத்த உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின் போது அமைதியான முறையில் விவசாயிகள் போராட உரிமை இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மூன்று வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு வலியுறுத்தினர். அப்போது, விவசாயிகளை போராட்ட இடத்திலிருந்து அகற்றுவதற்கு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, டெல்லி அருகே விவசாய சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டம் 47வது நாளாக நீடித்து வருகிறது. மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பின்னரும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை இம்மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது.
Comments