கடும் குளிரை ராணுவ வீரர்கள் எதிர்கொள்ள குளிர் பாதுகாப்பு சாதனங்கள் உருவாக்கம் - டி.ஆர்.டி.ஓ
எல்லையில் நிலவும் கடும் குளிரை இந்திய ராணுவ வீரர்கள் எதிர்கொள்ள குளிர் பாதுகாப்பு சாதனங்களை டி.ஆர்.டி.ஓ அமைப்பு உருவாக்கி உள்ளன.
சீனப் படையினரின் ஊடுருவலை தடுக்க, கிழக்கு லடாக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்காக அவை உருவாக்கப்பட்டுள்ளன.
உறைநிலையில் உள்ள பனி நிறைந்த பகுதியில், வெப்பநிலையை அதிகரிக்க 420 கோடி ரூபாய் மதிப்பில் ஹிம் தபாக் என்ற சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடும் பனியால் ஏற்படும் frost bite எனப்படும் திசுக்கள் குளிரில் உறைந்து அழுகும் நிலையை தவிர்க்கவும், குளிரினால் எற்படும் வெடிப்பை போக்கவும் கீரிம் ஒன்றை டிஆர்டிஓ உருவாக்கி உள்ளது.
Comments