திருப்பூரில் பொங்கலுக்கு பொருட்கள் வாங்க அலை மோதிய மக்கள் கூட்டம்
திருப்பூரில் பொங்கல் பண்டிகைக்காக தேவையான பொருட்களை வாங்க புது மார்க்கெட் வீதியில் கூட்டம் அலைமோதியது.
ஒருபக்கம் புதுத் துணிகள் வாங்க, இளைஞர்களும் இளம் பெண்களும் ஆர்வம் காட்ட, மற்றொரு பக்கம் பெண்கள், ஆபரணங்கள், பானை மற்றும் கரும்பு உள்ளிட்டவைகளை வாங்கினர்.
இதேபோல, புதுச்சேரியிலும் பொங்கல் விற்பனை, களை கட்டியது. இங்குள்ள காந்தி வீதி, நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதியது. கிராமப்புறங்களில் இருந்து வந்த பொது மக்கள் பொங்கலுக்கு தேவையான புத்தாடைகள் - அணிகலன்கள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர்.
Comments