கர்நாடகாவில் ஆளுநர் பதவி வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற பெண் நீதிபதியிடம் ரூ.8.80 கோடி மோசடி
கர்நாடகாவில் ஓய்வு பெற்ற பெண் நீதிபதிக்கு ஆளுநர் பதவி வாங்கி தருவதாக ஆசை காட்டி, ஜோதிடர் ஒருவர் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த யுவராஜ் என்ற ஜோதிடர் மீது கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் பெண் நீதிபதி மோசடி புகார் கொடுத்திருந்தார்.
யுவராஜிடம் பெண் நீதிபதியை அறிமுகம் செய்து வைத்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றிருப்பதும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் 2- வது மனைவியான நடிகை குட்டி ராதிகாவுக்கும் பெங்களூரு ஜோதிடருக்கும் தொழில் தொடர்பாக நட்பு இருந்து வந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
Comments