புதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு நன்மை - பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்
புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விளைபொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயிக்க முடியும் என்பதால், ஏராளமான விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பாலையில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டியல் பிரிவில் உள்ள 7 சாதிகளைத் தேவேந்திர குல வேளாளர் எனப் பொதுப்பெயரில் அழைப்பதற்கு பாஜக முதலில் குரல் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதிலும் பாஜக சார்பில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.
Comments