இந்துக் கடவுளை விமர்சித்த திருமாவளவனுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - காயத்ரி ரகுராம்
இந்துக் கடவுளை தொடர்ந்து விமர்சித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
நாகை அவுரியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடவுளை விமரிசிக்கும் திருமாவளவனின் கருத்திற்கு, தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
Comments