தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 57385
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி, இரவு 7 மணி வரை மேற்குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments