அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு

0 2140
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜோ பைடன் வெற்றியை ஏற்காமல் பிடிவாதமாக இருக்கும் டிரம்ப், 20ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இருப்பினும் டிரம்பின் நம்பிக்கைக்குரியவரான மைக் பென்ஸ், ஜோ பைடன் அழைப்பு விடுத்தால் அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வேன் என்று கூறி வந்தார்.

இதையடுத்து அவருக்கு ஜோ பைடன் அண்மையில் அழைப்பு விடுத்தார்.

இந்த சூழ்நிலையில், அவரது அலுவலக அதிகாரி, பைடன் பதவியேற்பு விழாவில் மைக் பென்ஸ் பங்கேற்பார் என அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments