ஆன்டிபாடீசை ஏமாற்றும் திறன் வாய்ந்த 3 மரபணு மாற்ற கொரோனா வைரசுகள் மும்பையில் கண்டுபிடிப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்

0 10837

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி, தொற்றை ஏற்படுத்தும் 3 மரபணு மாற்ற கொரோனா வைரசுகள் மும்பையில் கண்டுபிடிப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை மெட்ரோபொலிடன் ஏரியாவில் 700 கொரோனா நோயாளிகளிடம்  நடத்தப்பட்ட சோதனையில் 3 நோயாளிகளிடம் இந்த  வைரசுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டாடா நினைவு மருத்துவமனை ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரசுகள், பிரிட்டன் மரபணு மாற்ற வைரசை விடவும் ஆபத்தான தென்னாப்பிரிக்க வைரஸ் போன்றவை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த வைரசுகளை குறித்த கூடுதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments