கிருஷ்ணகிரியில், சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுமி உள்பட இருவர் பலி

0 5689
கிருஷ்ணகிரியில், சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுமி உள்பட இருவர் பலி

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவின் போது, வீட்டின் முதல் தள சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி உள்பட இருவர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை, ஏராளமானோர் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் மாடி சுவர் மீது அமர்ந்து பார்த்தனர்.

அப்போது பாரம் தாங்காமல், சுவர் இடிந்து கீழே அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்ததில் மேகா ஸ்ரீ என்ற சிறுமியும்,முனிபாலன் என்ற முதியவரும் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments