லோன் ஆப் மூலம் மோசடி - கைதான சீனர்களின் குற்றப் பின்னணி என்ன? சீன தூதரகத்துக்கு சென்னை காவல் துறை கடிதம்

0 2129
லோன் ஆப் மூலம் மோசடி - கைதான சீனர்களின் குற்றப் பின்னணி என்ன? சீன தூதரகத்துக்கு சென்னை காவல் துறை கடிதம்

லோன் ஆப் மூலம் உடனடி கடன் வழங்கி, அதிக வட்டி வசூலித்து மோசடி செய்த வழக்கில், சிக்கிய சீனர்களின் குற்றப் பின்னணி விபரங்களை கேட்டு டெல்லியிலுள்ள சீன தூதரகத்துக்கு சென்னை காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.

இந்த வழக்கில் கைதான இரு சீனர்களுக்கு கீழ் 10 அலுவலகங்கள் இயங்கி வந்ததும், அந்நிறுவனங்களில் இயக்குனர்கள் முதல் ஊழியர்களை வரை இந்தியர்களை பணியமர்த்தி, பல கோடி ரூபாய் முதலீடு செய்து, மறைமுகமாக மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

மோசடி செய்த பணத்தை ரேசர் பே என்கிற ஆன்லைன் பரிவர்த்தனை தளம் மூலம் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பியதும் தெரியவந்தது.

இதனையடுத்து, ரேசர் பே ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனத்திடமும் விசாரணை நடத்த திட்டமுட்டுள்ள போலீசார், சீனர்கள் இருவரும் விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்தது ஏன்? உள்ளிட்ட விபரங்களை கேட்டு சீன தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments