ஸ்பெயினை சூறையாடிய பிலோமினா சூறாவளியால் 3 பேர் பலி
ஸ்பெயினின் தலைநகரான மேட்ரிட்டில் வீசிய பிலோமினா சூறாவளிக்கு 3 பேர் பலியாகினர்.
மேட்ரிட் மற்றும் மத்திய ஸ்பெயினின் பல பகுதிகளை இந்த சூறாவளி சூறையாடியதில மரங்களும், கட்டிட்டங்களும் சரிந்தன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையும் கொட்டியது.
ராணுவத்தின் அவசரகால மீட்புக் குழுவினர் களத்தில் இறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். மேட்ரிட் விமான நிலையம் மூடப்பட்டது.
Comments