அமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி

0 1307
அமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி

புத்தாண்டின் முதல் எட்டு நாட்களில் மட்டும் அமெரிக்காவில் 23 ஆயிரத்து 83 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாக, அங்கு கொரோனா நிலவரத்தை கண்காணிக்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 21 லட்சத்தை நெருங்கி விட்டதாகவும், இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்தை தொட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன், சூப்பர் ஸ்பெரட்டர் நிகழ்வுக்கு அது பெரிய உதாரணம் எனவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments