இந்திய கிரிக்கெட் அணியினரை ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறியுடன் திட்டியதால் சர்ச்சை
இந்திய கிரிக்கெட் அணியினரை மீண்டும் இனவெறியுடன் ஆஸ்திரேலிய ரசிகர்கள் திட்டியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிட்னி போட்டியின் 2வது மற்றும் 3வது நாளன்று முகமது சிராஜ், பும்ராவை குரங்கு என ரசிகர்கள் திட்டியதாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ள நிலையில் இன்றைய ஆட்டத்திலும் பவுண்டரி கோடு அருகே பீல்டிங்கில் ஈடுபட்ட சிராஜை ரசிகர்கள் திட்டியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, அவரை திட்டியதாக கூறப்படும் ரசிகர்கள் மைதானத்திலிருந்து போலீசாரால் வெளியேற்றப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்திய அணியிடமும் வருத்தம் தெரிவித்துள்ளது.
ஐசிசி விசாரணை முடிவுக்கு காத்திருப்பதாகவும், விசாரணையில் அடையாளம் காணப்படும் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதியளித்துள்ளது.
Comments