கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு அதிபர் டிரம்ப் குற்றம் செய்ததாக அவரது சொந்த கட்சி எம்பிக்கள் குற்றச்சாட்டு
கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு அதிபர் டிரம்ப் குற்றச்செயலில் ஈடுபட்டதாக, அவரது சொந்த கட்சியான குடியரசு கட்சி எம்பிக்களே தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையை தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
பதவி விலகவில்லை என்றால் அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் குடியரசு கட்சியின் முக்கிய செனட்டரான பேட் டூமே, டிரம்ப் நடத்தியது கண்டனத்திற்குரிய ஒரு குற்றச்செயல் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதே நேரம் கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு செனட்டின் ஒப்புதலுக்கு வந்தால் என்ன நடக்கும் என கூற முடியாது என்றும் தொலைக்காட்சி விவாதத்தில் அவர் கூறினார்.
Comments