ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பேனர்களுடன் திரண்ட அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்..

0 8002
ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

டிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அவரது ரசிகர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

' வா தலைவா வா...' ' மாத்துவோம் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் ' என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ரஜினிகாந்த்தின் உடல் நலத்திற்காக மும்மத முறைப்படி வழிபாடும் நடத்தினர். ரஜினி திரைப்பட பாடலுக்கு உணர்ச்சி மிகுதியால் ரசிகர்கள் பலர் நடனமாடினர்.

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments