ஸ்பெயின் நாட்டில் கொட்டித் தீர்க்கும் பனிப்பொழிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
ஸ்பெயின் நாட்டில் கொட்டித் தீர்க்கும் கொடும் பனி காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.
ஃபிலோமினா புயலால் ஏற்பட்ட தாக்கத்தினால் தலைநகர் மாட்ரிட் நகரம் முழுவதும் பனி சூழ்ந்து காணப்படுகிறது. மலாகா என்ற இடத்தில் ஆறு கரை புரண்டு ஓடியதில் காரில் பயணம் செய்த தம்பதியினர் உயிரிழந்தனர்.
இதேபோல் மேலும் இருவர் பனியால் உறைந்து உயிரிழந்துள்ளனர். இதனிடையே வீடில்லாமல் கார்களுக்குள் வாழும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதீத பனிப்பொழிவு காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Comments