பாக். தீவிரவாதிகள் லக்வி, மசூத் அசாரின் கைது நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்ப்பு

0 1154
பாக். தீவிரவாதிகள் லக்வி, மசூத் அசாரின் கைது நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்ப்பு

மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஜாகிர் உர் ரஹ்மான் லக்வியைக் கைது செய்த பாகிஸ்தானின் நடவடிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்கா, அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை என்று விமர்சித்துள்ளது.

தீவிரவாதத்திற்கு நிதித்திரட்டிய குற்றச்சாட்டை மீறி, மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கு லக்விக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம், ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை வரும் 18ம் தேதிக்குள் கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு நிதித் திரட்டியது, தீவிரவாத பிரச்சாரம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் அசார் மீது சுமத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments