டிவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக மூடப்பட்டதால் டிரம்ப் ஆவேசம்.. சொந்தமாக இணைய வெளியை உருவாக்கப்போவதாக அறிவிப்பு..!
தமது டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டதையடுத்து சொந்தமான இணைய வெளியை உருவாக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் டிரம்ப் தனது ஆதரவாளர்களை வன்முறைக்குத் தூண்டியதாகவும் மேலும் வன்முறைகளை கிளரச் செய்யலாம் என்றும் டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தமது அதிகாரப்பூர்வமான அரசு டுவிட்டர் கணக்கில் இருந்து டிரம்ப் பதிவிட்டவைகளும் சில நிமிடங்களில் உடனடியாக நீக்கப்பட்டன. இதனால் விரைவில் தமக்கான தனி சமூக ஊடகங்களை உருவாக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
Comments