இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு கொரோனா தடுப்பூசி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை போட்டுக் கொண்டார்.
Pfizer தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட முதல் கப்பல் கடந்த டிசம்பர் மாத மத்தியில் இஸ்ரேல் சென்றது. கடந்த 7ந்தேதி இஸ்ரேல் ஒரு லட்சம் டோஸ் Moderna கொரோனா தடுப்பூசிகளை பெற்றது.
ஆனால் இஸ்ரேலில் 90லட்சம் பேர் இருப்பதால் கூடுதல் தடுப்பூசிகளை பெறும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்ச் மாத இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதி அளித்தார்.
Comments