சீன துறைமுகங்களில் சிக்கி தவிக்கும் 39 இந்திய மாலுமிகள் வருகிற 14ந்தேதி நாடு திரும்புகின்றனர்; அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் தகவல்

0 1268
சீன துறைமுகங்களில் சிக்கி தவிக்கும் 39 இந்திய மாலுமிகள் வருகிற 14ந்தேதி நாடு திரும்புகின்றனர்; அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் தகவல்

சீன துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு உள்ள சரக்கு கப்பல்களில் இருக்கும், 39 இந்தியர்கள், வரும், 14 ஆம் தேதி நாடு திரும்ப உள்ளனர்' என, மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், சீன துறைமுகங்களில், பல மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ள இரு சரக்கு கப்பல்களில் இருக்கும், 39 பேரும் நாடு திரும்ப சீனா அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளர்.

'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முயற்சிகள் வாயிலாக, இந்த நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளது' என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments