முதலமைச்சருக்கு அங்கீகாரம்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்..!

0 4635
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகவும், கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அதிகாரம் வழங்குவதாகவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகவும், கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அதிகாரம் வழங்குவதாகவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கொரோனா நெகடிவ் சான்றிதழ்களை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்பட்டது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், முற்பகல் 11 மணியளவில் செயற்குழு கூட்டமும் பிறகு, பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றன. அதிமுக நிர்வாகிகளின் சிறப்புரைகளுக்குப் பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளதை ஏகமனதாக வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தேர்தல் வியூகம் வகுக்கவும், கூட்டணிக் கட்சிகளையும், தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்யவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழுஅதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு குழுவுக்கு ஒப்புதலும் அங்கீகாரம் வழங்குவது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி எப்போதும் வீழும் என்று காத்துகொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் அடுத்தும் அதிமுக ஆட்சியே என்று சாதித்து காட்ட உள்ளதாக கூறினார். 4 ஆண்டுகளில் கற்றதை வைத்துக்கொண்டு, வரும் நாட்களில்  சிறப்பாக பணியாற்ற உள்ளதாக அவர் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தை யார் ஆள வேண்டும் சட்டமன்றத்தை யார் ஆள வேண்டும் என மக்கள் பிரித்து பார்த்து வாக்களிப்பதாக அவர் குறிப்பிட்டார். தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது ஸ்டாலின் நேருக்கு நேர் வந்தால் விவாதிக்கலாம் என்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, தங்கள் இயக்கத்தில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு, கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் இல்லை என்றார். கொரோனாவை விட தீவிர வைரசான திமுகவை ஒழித்துக் கட்டும் ஆண்டுதான் 2021 என அவர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments