லித்தியம் சந்தையில் சீனாவின் ஆதிக்கம்: 3 கட்ட திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா

0 7539

லித்தியம் பேட்டரி சந்தையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி, இந்தியா முன்னணிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

பூமியின் மேலோட்டில் 0.002 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே உள்ள அரிதான தனிமம் லித்தியம். ஆனால் செல்போன், டேப், கேமரா, லேப்டாப், கார்கள் என லித்தியம் பேட்டரிகள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன.

எதிர்காலத்தில் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரிக்கும்போது, அதற்கான பேட்டரிகள் தயாரிப்பு லித்தியத்தையே சார்ந்துள்ளது. எலோன் மஸ்க்கின் டெஸ்லா கார்கள், அதற்கு போட்டியாக வரப்போகும் கார்கள் அனைத்திலும் லித்தியம்.

லித்தியம் உற்பத்தியிலும், அதற்கான உலக செல்போன் சந்தையிலும் சீனா முன்னணியில் உள்ளது. உலகளவில் லித்தியம் அயன் பேட்டரிகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டில் 1.2 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு முடிவுகட்டி, லித்தியம் இருப்பில் இந்தியா தன்னிறைவை எட்டவும், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு லித்தியம் சப்ளை பாதிக்காத வகையிலும் மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. லித்தியத்தை பெருமளவில் இருப்பு வைத்துள்ள அர்ஜென்டினா, சிலி, பொலிவியா நாடுகளிடமிருந்து நேரடியாக வாங்கி, அவற்றை பிராசஸ் செய்வதற்கான ஆலைகள் உள்ளிட்ட கட்டமைப்பை உருவாக்கி, உலகச் சந்தையில் நுழைவது என மூன்று படிநிலைகளில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

லித்தியம், கோபால்ட் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த தனிமங்களை வாங்குவதற்கென்றே Khanij Bidesh India Limited என்ற புதிய அரசுத்துறை நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அர்ஜெண்டினா நிறுவனத்துடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது.

குஜராத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் லித்தியம் சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட உள்ளது. லித்தியம் தாது வளம் நிறைந்த ஆஸ்திரேலியாவும் இந்தியாவுடன் கைகோர்க்க முன்வந்துள்ள நிலையில், சீனாவின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்ட மூன்று கட்ட திட்டங்களுடன் இந்தியா களமிறங்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments