கடலூர்: வரிசையாக 6 கோழிமுட்டைகள்... திகிலில் உறைந்த மக்கள்!
கடலூரில் நல்லபாம்பு ஒன்று தான் விழுங்கிய 6 கோழி முட்டைகளை உடையாமல் திருப்பி கக்கியதை கண்டு பொதுமக்கள் திகிலடைந்தனர்.
கடலூர் அருகே கம்மியம்பேட்டையே சேர்ந்த ஒருவர் தன் வீட்டின் மொட்டை மாடியில் வைக்கோல் போட்டு வைத்திருந்துள்ளார். அவரின் வீட்டில் வளர்க்கப்படும் கோழி ஒன்று இந்த வைக்கோல் போரில் முட்டையிட்டு அடைகாத்து வந்தது. திடீரென்று வைக்கோல் போரிலிருந்த கோழி மரண ஓலத்துடன் கத்திக் கொண்டிருந்தது. சத்தம் கேட்டு மொட்டை மாடிக்கு சென்று உரிமையாளர் பார்த்த போது, கோழி துடி துடித்துக் கொண்டிருந்தது. வீட்டின் உரிமையாளர் கோழியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வைக்கோல் இருந்த பகுதியை பார்த்த போது, உள்ளே பாம்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக , பாம்பாட்டியை அழைத்து வந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பாம்பாட்டி நல்லபாம்பை சாதூர்யமாக செயல்பட்டு பிடித்தார். சுமார் , 6 அடி நீளம் இருந்த நல்ல பாம்பு கோழி முட்டைகளை முழுங்கி விட்டு ஓய்வாக இருந்தது தெரிய வந்தது. பாம்பை பிடித்த போது, வயிற்றிலிருந்த 6 கோழி முட்டைகளையும் அப்படியே வெளியே கக்கியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் திகிலில் உறைந்து போனார்கள். பின்னர், அந்த பாம்பு வனத்தில் கொண்டு விடப்பட்டது.
Comments