டெஸ்லா மின் கார் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு, முதன்முறையாக சுமார் 58 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா மின் கார் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு, முதன்முறையாக சுமார் 58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டெஸ்லாவின் பங்கு விலை நேற்று 5.6 சதவிகிதம் அதிகரித்ததை தொடர்ந்து இந்த அளவுக்கு மூலதன மதிப்பும் உயர்ந்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தில் 21 சதவிகித பங்குகளை எலான் மஸ்க் வைத்துள்ளார். இது அவரது நிகர சொத்து மதிப்பில் சுமார் 12 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments