கிழக்கு லடாக்கில் இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் கைது
லடாக்கில், அத்துமீறிய சீன இராணுவ வீரர், இந்திய இராணுவத்தினரால், உடனடியாக தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி, டெம்சோக் (Demchok) செக்டாரில், அத்துமீறி, இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு, 2 நாள் தீவிர விசாரணைக்குப் பின், அந்நாட்டு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கிழக்கு லடாக்கின் சூசுல் (Chushul) செக்டாருக்கு உட்பட்ட, பாங்காங் ஏரிக்கரையின் தெற்குப் பகுதியை ஒட்டிய, குரூங் (Gurung) மலைப் பகுதியில், அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர், வெள்ளிக்கிழமை அதிகாலைப் பொழுதில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments