டிரம்ப் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - சபாநாயகர் நான்சி பெலோசி
அதிபர் டிரம்ப் உடனடியாக தமது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் அவருக்கு எதிரான கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படும் என சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையை வைத்து பார்க்கும் போது டிரம்பை உடனடியாக அதிபர் பதவியில் இருந்து அகற்றுவது அவசியம் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கலவரம் குறித்து ஜனநாயக கட்சியின் முக்கிய எம்பிக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
25 ஆவது சட்டதிருத்தத்தை பயன்படுத்துவது, கண்டன தீர்மானம் அல்லது கண்டனத் தீர்மானத்திற்கான உரிமைமீறல் தீர்மானத்தை கொண்டுவருவது, இதில் எதை பயன்படுத்தியாவது டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Comments