அமெரிக்க அதிபர் டிரம்ப் வசம் உள்ள, அணுகுண்டு தாக்குதலுக்கு உத்தரவிடும் அதிகாரம் : ஆட்சிக்கு வரப்போகும் ஐனநாயகக் கட்சியினரின் புதிய கவலை
அமெரிக்க அதிபர் டிரம்ப் வசம் உள்ள, அணுகுண்டு தாக்குதலுக்கு உத்தரவிடும் அதிகாரம், ஆட்சிக்கு வரப்போகும் ஜனநாயகக் கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும் அணுகுண்டு கால்பந்து எனப்படும் பை அவருடனேயே இருக்கும்.
அதில் அணுகுண்டு தாக்குதலுக்கான வழிமுறைகள், தாக்குதல் திட்டங்கள், அதை செயல்படுத்துவதற்கான ரகசிய குறியீடுகள் இருக்கும்.
இந்த ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி அமெரிக்க அதிபர் மட்டுமே அணுகுண்டு தாக்குதலுக்கு உத்தரவிட முடியும்.
இந்நிலையில், ராணுவத் தலைமை தளபதி மார்க் மில்லியை தொடர்பு கொண்டு, ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி அணுகுண்டு தாக்குதலுக்கு டிரம்ப் உத்தரவிட்டு விடாமல் தடுப்பது எப்படி என கேட்டதாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
அணுகுண்டு தாக்குதலுக்கான முழுஅதிகாரத்தை அதிபருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளதாகவும், அவர் முடிவெடுத்து விட்டால் யாரும் தடுக்க முடியாது என்று ராணுவத் தலைமை தளபதி பதிலளித்திருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments