முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

0 3920
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு  கூட்டம் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளுடன் காலை முதல் அப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் வருகையின்போது மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கொரோனா நெகடிவ் சான்றிதழ்களை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்பட்டது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், முற்பகல் 11 மணியளவில் செயற்குழு தொடங்கி சிறிதுநேரம் நடைபெற்ற பிறகு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதிமுக நிர்வாகிகளின் சிறப்புரைகளுக்குப் பிறகு 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளதை ஏகமனதாக வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக அரசையும், ஆட்சியின் சாதனைகள், நலத்திட்டங்களை புகழ்ந்தும் 12 தீர்மானங்களும், திமுக மற்றும் மு.க.ஸ்டாலினை கண்டித்து 2 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தேர்தல் வியூகம் வகிக்கவும், கூட்டணிக் கட்சிகளையும், தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்யவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழுஅதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு குழுவுக்கு ஒப்புதலும் அங்கீகாரமும் வழங்கி கூடுதலாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments