மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வாங்கியதில் முறைகேடு, சீன நிறுவனத்துக்கு ரூ.456 கோடியை வழங்காமல் நிறுத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தமிழகத்தில் மாணவ மாணவியருக்குத் தரமற்ற மடிக்கணினிகளை வழங்கிய சீன நிறுவனத்திற்கு மீதமுள்ள 465 கோடி ரூபாயை வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குறைந்த செயல் திறன் கொண்ட மடிக்கணினியைச் சீன நிறுவனத்திடம் வாங்கியதால் அந்நிறுவனத்தின் சட்டவிரோத லாபம் மட்டும் 469 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மடிக்கணினியில் நினைவகத்தை 4 ஜி.பி.யிலிருந்து 8 ஜி.பி.யாக அதிகரிப்பதற்கென மதர்போர்டு வாங்கியதில் சீன நிறுவனத்துக்கு மேலும் 392 கோடி ரூபாய் சட்ட விரோத லாபம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சீன நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 456 கோடி ரூபாயை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தரக்குறைவான மடிக்கணினி வழங்கியதற்காகப் பிளாக் லிஸ்ட் செய்து பெருந்தொகையை அபராதமாகப் பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments