தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

0 2137
தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பிற கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments