கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 70 கடைகள் எரிந்து நாசம்

0 2233
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 70 கடைகள் எரிந்து நாசம்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் நேரிட்ட தீ விபத்தில் சுமார் 70 கடைகள் எரிந்து நாசமாகின.

அப்பகுதியில் அலங்கார பொருட்கள், பேன்சி பொருட்கள் மற்றும் நறுமண பொருள்களை விற்பனை செய்யும் 500 - க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

அதில் காந்தி மண்டபம் அருகே உள்ள கடைகளில் அதிகாலை மூன்றரை மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது.

தகவலின்பேரில் 3 வாகனங்களில் தீயணைப்பு படையினர் வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

மின் கசிவினால் தீ விபத்து நேரிட்டதா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments