பெண் விமானிகள் குழுவினருடன் வடதுருவம் வழியாக இன்று பெங்களூர் வருகிறது ஏர் இந்தியா விமானம் : சவாலான பணியில் சிங்கப் பெண்கள்
ஏர் இந்தியாவின் மகளிர் விமானிகள் 4 பேர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு வடதுருவத்தின் வழியாக முதன் முறையாக விமானத்தை இயக்குகின்றனர்.
உலகிலேயே மிக நீண்ட தொலைவாக கருதப்படும் இந்தப் பாதையில் 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்று பெங்களுரு வந்தடைய உள்ளனர்.
பொதுவாக வடதுருவத்தின் வழியாக விமானத்தை இயக்குவது சவலான பணி என்பதால், மிகவும் அனுபவம் கொண்ட விமானிகளிடமே அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.
ஏற்கனவே பல முறை விமானங்கள் இயக்கப்பட்டுள்ள போதும், இந்த முறை முதல் முறையாக ஜோயா அகர்வால் உள்ளிட்ட 4 பெண் விமானிகள், போயிங் 777 விமானத்தை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள விமானிகள், புதிய வரலாறு படைக்க இருக்கின்றனர்.
Comments