லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மீதான வங்கி மோசடி வழக்கின் விசாரணை நிறைவு
லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நீரவ் மோடியின் வங்கி மோசடி தொடர்பான வழக்கின் விசாரணை முடிவு அடைந்தது.
இவ்வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு அவர் லண்டனுக்குத் தப்பிச் சென்றார்.
அமலாக்கத்துறை நடவடிக்கைகளினால் அங்கு கைது செய்யப்பட்ட நிரவ் மோடியை இந்தியா அழைத்து வர அதிகாரிகள் சட்டரீதியான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இறுதிக்கட்ட விசாரணையின் போது நிரவ் மோடியின் சகோதரியும் அவர் கணவரும் நீரவ் மோடியின் சொத்துகளைக் குறித்த தகவல்களை வெளியிட்டு அப்ரூவர்களாக மாறியதால் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
Comments