பொருளாதார வளர்ச்சிக்கான சீர்த்திருத்தங்களை பட்ஜெட்டில் அறிவிக்க பிரதமர் மோடியிடம் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தல்
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான சீர்திருத்தத் திட்டங்களை பட்ஜெட்டில் இணைக்குமாறு பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிதி ஆயோக் சார்பில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வங்கிகள் சீர்திருத்தம், நலிவடைந்த நிறுவனங்களுக்கான புத்துயிர்ப்புத் திட்டம், இறக்குமதி வரிக்குறைப்பு, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு குறைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தலைமை நிர்வாகி அமிதாப் கன்ட் மற்றும் முன்னணி தொழில் அதிபர்கள் பலர் காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
Comments