ஆஸ்திரேலியாவில் வாழிடத்திற்காக சண்டையிட்டுக் கொண்ட கொடிய விஷப் பாம்புகள்
ஆஸ்திரேலியாவில் கொடிய விஷமுள்ள இரு பாம்புகள் வாழ்விடத்திற்காக சண்டையிட்டுக் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய வனஉயிரின பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மல்கா வகையைச் சேர்ந்த இந்தப் பாம்புகள் அப்பகுதியில் அதிக விஷம் கொண்டவையாகப் பார்க்கப்படுகின்றன. வனப்பகுதியை ஒட்டிய மண் பாதையில் வந்த இரு ஆண் பாம்புகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டன.
வாழிடத்திற்காகவும், அப்பகுதியில் உள்ள பெண் பாம்புகளை தங்கள் வசம் ஈர்ப்பதற்காகவும் இந்தச் சண்டை நடந்ததாகவும் தலையை அதிக உயரத்திற்கு மேலே எழுப்பும் பாம்பு வெற்றி பெற்றதாகக் கருதப்படும் என உயிரியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments