கறிக்கோழி, முட்டைகளை சமைத்து உண்பதனால் மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவாது - மத்திய சுகாதார அமைச்சகம்

0 2156
கறிக்கோழி, முட்டைகளை சமைத்து உண்பதனால் மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவாது - மத்திய சுகாதார அமைச்சகம்

கறிக்கோழி, முட்டை போன்றவற்றை உண்பதனால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளா, ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் , ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்திலும் விலங்குகள் நலத்துறை பறவைக்காய்ச்சல் பரவுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வரை பாதிப்படையாத மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

பண்ணை கோழிகள் மற்றும் முட்டைகளின் பாதுகாப்பு குறித்தும், அவற்றை வேகவைத்து / சமைத்து உண்பது பாதுகாப்பானது என்பது குறித்தும் விழிப்புணர்வை அதிகரிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments