கொரோனா தடுப்பு விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை - உயர்கல்வித்துறை
கொரோனா தடுப்பு விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
முதுநிலை மற்றும் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதேநேரம் பிற பருவங்களில் பயிலும் மாணவர்களை கல்லூரிக்கு வரவழைக்கக்கூடாது, அவர்களுக்கு இணையவழியிலேயே வகுப்புகளை தொடரவேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதைமீறி சில தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் பருவத்தேர்வு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புகார்கள் வந்ததையடுத்து விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Comments