அமெ.நாடாளுமன்ற வன்முறை கண்ணுக்கினிய காட்சி-சீனா கிண்டல்

0 1693
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைக் காட்சிகள் கண்ணுக்கு இனியவை என்றும் காணக்கிடைக்காதவை என்றும் சீனா கிண்டல் செய்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைக் காட்சிகள் கண்ணுக்கு இனியவை என்றும் காணக்கிடைக்காதவை என்றும் சீனா கிண்டல் செய்துள்ளது.

இந்த வன்முறை சம்பவத்தை சீனர்கள் இணைய தளங்களில் கொண்டாடி வருகின்றனர். சீன அரசு பத்திரிகையான பீப்பிள்ஸ் டெய்லி ஒரு படி மேலே போய், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலையில் ஹாங்காங் சட்டமன்றத்தில் சீன எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டக்காட்சிகளையும், அமெரிக்க சம்பவத்தின் காட்சிகளையும் ஒரே பக்கத்தில் பிரசுரித்துள்ளது.

ஹாங்காங் போராட்டத்தை அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பெலோசி, மிகவும் அழகான காட்சி என்று அன்று வர்ணித்ததையும் சுட்டிக்காட்டி பீப்பிள்ஸ் டெய்லி திருப்தி அடைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments