மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் முதலமைச்சருடன் ஆலோசனை... தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக பேட்டி

0 1604
கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தார்.

சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தடுப்பூசி திட்ட ஏற்பாடுகள், ஒத்திகையை பார்வையிட்ட பின்னர் தலைமைச் செயலகம் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், தடுப்பூசி திட்ட ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் விளக்கினார்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், பிரதமர் மோடியே இதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் திருப்தியையும், மனநிறைவையும் ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments